Some channels are slow to load or unable to play, you can try it on your PC
About Aathavan TV
ஆதவன் தொலைக்காட்சி, லண்டனை தலைமையகமாகக் கொண்டு இயங்குகின்ற உலகத்; தமிழ் மக்களுக்கான ஒரு வெற்றிகரமான தொலைக்காட்சியாகும். ஏனைய தொலைக்காட்சிகளில் இருந்து ஆதவன் தொலைக்காட்சியின் பொழுதுபோக்கு மற்றும் செய்தி நிகழ்ச்சிகள் அனைத்தும் முற்றிலும் வேறுபாடானவையாகும்.
 
ஆதவன் தொலைக்காட்சி, தொடர்ச்சியாக மிகவும் புதுமையான சிறப்பு நிகழச்சிகளை தயாரித்து வழங்குகின்றது. தொலைக்காட்சியை பார்ப்பது என்பது ஒரு வாழ்க்கைப் பயணம் போன்றது எனும் அடிப்படையில், ஆதவன் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளும் நிஜமான வாழ்க்கைப் பயணத்தைப்போன்றே தயாரித்து வழங்கப்படுகின்றது. நிகழ்ச்சிகள் அனைத்தும், நேயர்களின் நாடித்துடிப்பை அறிந்து, அவர்களின் ரசனைக்கேற்ப தொகுத்து வழங்கப்படுகின்றது.
 
ஆதவன் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள், அனைத்து வயதுடைய நேயர்களையும் ஈர்க்கும் வண்ணம் குடும்பத்துடன் சேர்ந்திருந்து பொழுதுபொக்குவதற்கு ஏற்றாற்போல் தொலைக்காட்சித் தொடர்கள், ஆவணப்படங்கள், செய்திகள், திரைப்படங்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள், விவாத நிகழ்ச்சிகள், வரலாற்றுத் தொடர்கள், சமையல் நிகழ்ச்சிகள், ஆன்மிக நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் கலை கலாசார நிகழ்ச்சிகள் என அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்பாக தொகுத்து வழங்கப்படுகிறது.
 
மிகச்சிறந்த நிகழ்ச்சிகளை வழங்கி உலகத் தமிழர்களின் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ள ஆதவன் தெலைக்காட்சியினை, உலகின் பல நாடுகளில் IPTV ஊடாக உயர் ஒளித்தரத்தில் (High Definition) கண்டு மகிழலாம்.

Channel Error

×
Aathavan TV
invisibility? Click to replace
Back to top